‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், கருத்தரங்கு: குரல்கள் இயக்கம் ஏற்பாடு

🕔 March 17, 2019

– முன்ஸிப் அஹமட் –

‘உத்தேச அரசியல் யாப்பும், வட – கிழக்கு இணைப்பும்’ எனும் தலைப்பில், இன்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

குரல்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில், சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்தார்.

குறிப்பாக உத்தேச அரசியல் யாப்பின் மூலம் முஸ்லிம்கள் எவ்வாறான நன்மை, தீமைகளை எதிர்கொள்ளலாம் என்பது குறித்து இங்கு தெளிவூட்டப்பட்டது.

இந்தக் கருத்தரங்களில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்தோர் கலந்து கொண்டனர்.

உத்தேச அரசியல் யாப்பு தொடர்பில் தெளிவூட்டும் கருந்தரங்குகளை, குரல்கள் இயக்கம், பல இடங்களிலும் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்