சஊதி இளவரசரின் நிறுவனம், இலங்கையில் முதலீடு செய்ய தயார்: ஹிஸ்புல்லாவுடனான பேச்சில் இணக்கம்

🕔 March 16, 2019
ஊதி அரேபிய இளவரசர் சஊத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத் க்கு சொந்தமான ‘எக்ஸலன்ரியா அராபியா’ நிறுவனத்தின் பிரதித்தலைவர் ஜியோவானி ஸாபியா வுக்கும், கிழக்கு ஆளுநரும் முஸ்லீம் வேல்ர்ட் லீக்கின் உயர் சபை உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.

இந் சந்திப்பில் சஊதி அரேபியாவிலும் , அதற்கு வெளியிலும் பல கோடி டொலர்களை முதலீடு செய்கின்ற மிகப் பெரிய நிறுவனமான ‘எக்ஸலன்ரியா அராபியா’, இலங்கையிலும் முதலீடு செய்வது தொடர்பாகவும், இலங்கையில் உள்ள தொழிற்சாலைகளில் முதலீடு செய்து பொருளாதார ரீதியில் இலங்கையை முன்னேற்றுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பல பில்லியின் டொலர்கள் முதலீடு செய்து அமைக்கப்படும் புதிய நகரத்துக்குப் பொறுப்பான இந் நிறுவனம், இலங்கையிலும் பாரிய முதலீடுகளை விரைவில் மேற்கொள்ள இணக்கம் தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பில் முஸ்லீம் வேல்ர்ட் லீக் கிழக்காசிய ஆலோசகர் கலாநிதி அஹமத் ஹமாத் ஜிலான் மற்றும் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மஷூர் மொளலானா ஆகியோரும் கலந்து கொண்டார்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்