இலங்கைக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு: சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் தெரிவிப்பு

🕔 January 23, 2019
லங்கையிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு 3500 பேருக்கான கோட்டா வழங்கப்படும் என்று சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் தெரிவித்தார்.

சஊதி தூதுவர் காத்தான்குடிக்கு விஜயம் செய்த போது, ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இலங்கைக்குஇதுவரை காலமும் 2500 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 13000 பேர் ஹஜ் செல்ல  விண்ணப்பித்திருந்தும் ஹஜ் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தனர்.

இந்த நிலையை கருத்திற்கொண்டு இரண்டு வார காலமே முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக  இருந்த எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சஊதி அரபியே அரசாங்கத்தின் இலங்கைகான தூதுவர் அஷ்ஷேய்க் நாசர் அல்ஹாலித் உடனும் முஸ்லிம் சமய கலாசார ஆலோசகர் ராபிததுல்  ஆலமி அல் இஸ்லாமி, செயலாளர் கலாநிதி ஈஸாயி , சஊதி  இளவரசர் முக்ரின் உட்பட பல தரப்பினர்களோடு பேசி,  2500 கோட்டாவை ஆகக் குறைந்தது 3500 ஆக வழங்க வேண்டும் என வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தார்.

இதனை பரீசிலித்த சஊதி அரசு, இலங்கையின் ஹஜ் கோட்டாவை 3500 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் இதற்கான உடன்படிக்கையை கைச்சாத்திடுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு  வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் சஊதி தூதுவர் ஹிஸ்புல்லாவிடம் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்