உயர் தரப் பரீட்சை பெறுபேறு: தேசிய, மாவட்ட மட்டங்களில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை

🕔 December 31, 2018

– றிசாத் ஏ காதர் –

ல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் முஸ்லிம் மாணவர்கள் தேசிய மட்டத்திலும், மாவட்ட மட்டங்களிலும் சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர்.

2018ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பரீட்சை முடிவுகளை இணையத்தளத்தில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டது.

அந்தவகையில் உயிரியல் முறைமைகள் தொழிநுட்ப பிரிவில் (Bio systems Technology) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவன் முகைதீன் பாவா றிசா முஹம்மட், மாவட்ட ரீதியாக முதலாமிடத்தையும், தேசிய ரீதியாக இரண்டாமிடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாத்தளை சாஹிரா தேசிய பாடசாலை மாணவன் முஹம்மது றிஸ்மி முஹம்மது ஹக்கீம் கரீம்  மாவட்ட ரீதியாக முதலிடத்தினையும், தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இவை மட்டுமன்றி, மாவட்ட ரீதியிலும் பல முஸ்லிம் மாணவர்கள் முதலாமிடத்தை தமதாக்கிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றவர்களின் விவரங்கள் வருமாறு;

கண்டி மாவட்டம்

நிலவ்பர் அஸ்மா  – உயிரியல் விஞ்ஞானப் பிரிவு –  கம்பளை சாஹிறா கல்லூரி

நுவரெலியா மாவட்டம்

முஹம்மட் றபீக் அப்துல்லா – பௌதீக விஞ்ஞானப் பிரிவு

அம்பாரை மாவட்டம்

முஹம்மது சலீம் ஹினாஸ் அஹமட் – பௌதீகவியல் விஞ்ஞானப் பிரிவு

அப்துல் கபூர் முஹம்மது அஸ்பாக் – பொறியியல் தொழிநுட்பவியல் பிரிவு – சம்மாந்துறை தேசிய பாடசாலை 

மட்டக்களப்பு மாவட்டம்

முஹம்மது ஹிதாயதுல்லா பாத்திமா சுக்ரா – உயிரியல் விஞ்ஞானப் பிரிவு – ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை

மாணவன் முஹம்மது ஹனீபா முஹம்மது பர்ஹாத் – பௌதீக வீஞ்ஞானப் பிரிவு  ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை

மன்னார் மாவட்டம்

ஏ.ஆர்.ரைஷா பர்வின் – உயிரியல் விஞ்ஞானப் பிரிவு – மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலை 

மாத்தளை மாவட்டம்

சனூர்டீன் பாத்திமா சப்னா – கலைப் பிரிவு (கலேவெல மாணவி)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்