அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளருக்கு இடமாற்றம்

🕔 December 31, 2018

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக கடமையாற்றி வந்த எம்.ஐ.எம். பாயிஸ், நிந்தவூர் பிரதேச சபைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பிரதம செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திசாநாயக கையெழுத்திட்டு, மேற்படி இடமாற்றத்துக்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

நாளை ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நிந்தவூர்பிரதேச சபையின் செயலாளராக பதிற் கடமையாற்றுமாறு, மேற்படி இடமாற்றக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நிந்தவூர் பிரதேச சபை செயலாளர் ஏ.ஏ. சலீம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளராக இடமாற்றப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்