சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபரை காணவில்லை: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அலட்சியம்

🕔 December 20, 2018
– றிசாத் ஏ காதர்-

ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இமாமுத்தீன் என்பவரைக் காணவில்லை என்று, பொலிஸில் முறைப்பாடு செய்யப்டப்டுள்ளது.

அட்டாளைச்சேனை-08 ஆம் பிரிவைச் சேர்ந்த ஏ.எல். இமாமுத்தீன் (வயது 45) என்பவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மனநல சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயுள்ளார். அவரை தேடி அவரது குடும்பத்தினர் அலைந்துகொண்டிருக்கின்றனர்.

குறித்த நபர் கடந்த 17.12.2018ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்,நேற்று பதன்கிழமை மாலை அவரைப் பார்ப்பதற்கு அவரின் மனைவி சென்றிருந்தபோது, குறித்த நோயாளியைக்  காணவில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியதாக அவரது மனைவி தெரிவிக்கிறார்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒருவரை காணவில்லை என்று வைத்தியசாலைத் தரப்பினர், இவ்வாறு பொறுப்பற்ற ரீதியில் பதிலளிக்கின்றமை குறித்து, நோயாளியின் உறவினர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இமாமுத்தீன் என்பவரின் மனைவி, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு செய்யச்சென்றபோது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு செல்லுமாறு திருப்பி அனுப்பபட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதுடன், வைத்தியசாலை நிரவாகத்துக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில், மேற்படி நபரைக் காண்பவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

தொலைபேசி இலக்கம்:  0767065325 , 0754848942

Comments