ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இவர் நியமனம் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்குள்ள அலுவலர்களுக்கு புதிய பணிப்பாளரை அறிமுகம் செய்து வைத்தார்.
இதேவேளை, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சமிந்த சிறிமல்வத்த, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவினுடைய பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், அவருடை பிரத்தியே உத்தியோகத்தராக சமிந்த சிறிமல்வத்த கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



