பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு, என்னிடம் ஜனாதிபதி கேட்டது உண்மைதான்: சஜித் பிரேமதாஸ

🕔 November 7, 2018

பிரதமர் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி சிறிசேன  தன்னிடம் கேட்டது உண்மை என, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில்  இன்று புதன்கிகிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசுகையிலேயே, அவர் இதனைக் கூறினார்.

ஆனாலும், ஜனாதிபதியின் கோரிக்கையினை கொள்கை அடிப்படையில் தான் நிராகரித்ததாகவும் சஜித் குறிப்பிட்டார்.

“ரணில் விக்கிரமசிங்கவுக்குகுப் பயந்து நான் இதனை நிராகரிக்கவில்லை. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது கொள்கை அடிப்படையில் சிறந்த விடயமல்ல என்று நான் கருதினேன்”.

தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே, அந்த நேரம் எனது நோக்கமாக இருந்தது” என்றும், இதன்போது சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு சஜித்பிரேமதாஸ மற்றும் கரு ஜயசூரியவிடம் தான் கோரிய போதும், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர் என்று, திங்கட்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்