அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை: பெண் வைத்தியரைத் தாக்கிய குற்றச்சாட்டை, மறுக்கிறார் டொக்டர் நௌபல்

🕔 October 31, 2018

பெண் வைத்தியர் ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தாக்கப்பட்டதாக, இன்றைய தினம் புதிதுசெய்தித்தளத்தில் செய்தியொன்று வெளியான நிலையில், குறித்த பெண் வைத்தியரை தான் தாக்கவில்லை என்றும், அவ்வாறு பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு பொய்யானது எனவும், வைத்தியர் எம்.ஜே. நௌபல், ‘புதிது’ செய்தித்தளத்துக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

“அலுவலக கடமையாக பல் சிகிச்சைப் பிரிவுக்கு நான் சென்ற போது, அங்கு குறிப்பிட்ட பல் வைத்தியர் ஹனீனா, என்னுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார். இறுதியில் அவருடைய கைத்தொலைபேசியில் என்மை படம் பிடித்தார். இதுவே அங்கு நடந்த சம்பவம்” என்றும், டொக்டர் நௌபல், அனுப்பி வைத்துள்ள மறுப்பறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆயினும், டொக்டர் ஹனீனாவை தான் தாக்கியதாகத் தெரிவித்து, அவரின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், டொக்டர் நௌபல் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தநிலையில், டொக்டர் ஹனீனா, தன்மை சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு பலவந்தமாக அனுமதி கோரியமையினால், 02ஆம் இலக்க நோயாளர் விடுதியில், காலை 11.00 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், சட்ட வைத்தியரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதனால், அதே தினம் பி.ப. 4.00 மணியளவில், நோயாளர் விடுதியிலிருந்து அவர் விடுவிக்கப் பட்டார்” எனவும், டொக்டர் நௌபல் விளக்கமளித்துள்ளார்.

டொக்டர் நௌபல் அனுப்பி வைத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் குறிப்பு: முறைப்பாட்டாளரான பெண் வைத்தியருடைய தரப்பு கருத்துக்களுக்கும், ‘புதிது’ செய்தித்தளம், நியாயபூர்வ அடைப்படையில் இடமளிக்கும்.

தொடர்பான செய்தி: பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்