பெண் வைத்தியர் மீது மற்றொரு வைத்தியர் தாக்குதல்: அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அட்டகாசம்

🕔 October 31, 2018

– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் ஆண் வைத்தியர் ஒருவர் தாக்கியதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பல் வைத்தியராகக் கடமையாற்றும் டொக்டர் எம்.ஏ.எப். ஹனீனா என்பவர் மீது, அங்கு கடமையாற்றும் டொக்டர் எம்.ஜே. நௌபல் என்பவர் நேற்று செவ்வாய்கிழமை தாக்குதல் நடத்தியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வைத்தியர்கள் இருவரும் கடமையில் இருந்த போது, வைத்தியசாலையில் வைத்தே, இந்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் பெண் வைத்தியர், நேற்று அதே வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆயினும், அவர் இன்றைய தினம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்