மைத்திரிக்கும் தனக்கும் இடையில் உள்ள கலாசார வேறுபாடு என்ன; பதில் சொன்னார் ரணில்

🕔 October 29, 2018

ணில் விக்ரமசிங்கவுக்கும், தனக்குமிடையில் கலாசார வேறுபாடுகளும் காணப்படுகின்றன என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அந்த வேறுபாடு என்ன என்று, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

“நான், நகரமயமாக்கப்பட்ட கொழும்பைச் சேர்ந்தவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கிராமிய மயப்பட்ட பொலன்னறுவையைச் சேர்ந்தவர். இதுவே எங்கள் இருவரிடையே காணப்பட்ட கலாசார வேறுபாடுகளாகும்” என்று, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியிருந்த ஜனாதிபதி, தனக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், அரசியல் ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் கூட வேறுபாடுகள் காணப்படுவதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பில், இன்று திங்கட்கிழமை சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசிய ரணிலிடம், அந்த ஊடகவியலாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதன்போதே மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், மேற்கண்ட வேறுபாட்டைத் தவிர, தனக்குத் தெரிந்த வேறு ஏதும் வேறுபாடுகள் கிடையாதென்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்