பிரதமர் மஹிந்த, கடமைகளைப் பொறுப்பேற்றார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்த வகையில், இலங்கை ஜனநாயக குடியரசின் 22 ஆவது பிரதமர் எனும் இடம் மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்துள்ளது.
ஏற்கனவே, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலும் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவி வகித்திருந்தார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்த ஒருவர், இலங்கை வரலாற்றில் பிரதமராகப் பதவி வகிக்கின்றமை இதுவே முதன்முறையாகும்.