எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு: எகிறுகிறது விலைவாசி

🕔 October 11, 2018

ரிபொருட்களின் விலைகள் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திரத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமடையும்.

அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 08 ரூபாவினாலும்  சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின்  விலை 08 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி  92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 155 ரூபாவாகவும், 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 169 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின்  விலை 141 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

எரிபொருட்களுக்கு விலை அதிகரிக்கும் போது, பொருட்களின் உற்பத்தி மற்றும் அவற்றுக்கான போக்குவரத்துச் செலவு ஆகியவை, அதனுடன் இணைந்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments