தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கவும்: அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

🕔 September 3, 2018
கோறளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று திங்கட்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

வாழசை்சேனை – ஓட்டமாவடி பாதை அபிவிருத்தி, கல்குடா குடிநீர் வழங்கல் திட்டம் உள்ளிட்ட சிறிய பாதை அபிவிருத்தி தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதோடு, இவையனைத்தும் வருட இறுதிக்குள் முடிவடைய வேண்டுமெனவும், குழாய் மூலம் குடிநீர் பெற்றுக் கொள்வதற்கு சிரமமாகவுள்ள பிரதேசங்களில், தற்காலிக தீர்வாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இக்கூட்டத்தில் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.என்.எம். முபீன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து, ஓட்டமாவடி வை. அஹமட் வித்தியாலயத்துக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாடசாலையின் பெளதீக வள பற்றாக்குறைகள் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்திடம் கேட்டறிந்துகொண்டார்.

இந்த நிலையில், தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்துடன் கூடிய 03 மாடி கட்டிடத்தில் எஞ்சியுள்ள வேலைகள் மற்றும் மண்டபத்துக்கு முன்னாலுள்ள சிறுவர் பூங்கா என்பவற்றை, தனது பன்முகப்படுத்தப்பட்ட 15 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டிருந்து செய்து தருவாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் பிரதி அமைச்சர் அலி சாஹிர் மெளலானா இதன்போது வாக்குறுதியளித்தார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்