மஹிந்த அணிக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை

🕔 September 3, 2018

ஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி, அரசாங்கத்துக்கு எதிரான பாரிய போராட்டம் ஒன்றினை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ள நிலையில், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாளை மறுதினம் புதன்கிழமை கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றிணை முன்னெடுக்கப் போவதாக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்கட்சி அறிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்படுத்தினால், அவர்களுக்கு எதிராக அதிகபட்ச சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா பூஜித் ஜயசுந்தர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்ப்புப் போராட்டம் நடத்தினால், அந்த நடவடிக்கை பொதுமக்களின் கடமைகளுக்கு இடையூறாக அமையக் கூடாது எனவும் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

Comments