கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, அமைச்சரவை அங்கீகாரத்துக்கு வந்துள்ளது

🕔 August 31, 2018

லங்கையின் வரலாற்றில ஒரு தசாப்தத்துக்குப் பின்னர், நாடு முழுவதிலும்  எட்டு மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கிய கூட்டுறவு துறையின் முதலாவது தேசியக் கொள்கை, இறுதி அங்கீகாரத்துக்காக அமைச்சரவை மட்டத்திற்கு வந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்துள்ள தேசிய கூட்டுறவு கொள்கை, அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன், இலங்கையின் கூட்டுறவுத்துறை  முன்னோக்கி நகர்வதற்கும், குறிப்பாக – வழிகாட்டல்  மற்றும் கையேட்டு நெறிமுறையின் ஒரே கட்டமைப்பாக மாறும்.

நாட்டில் கடந்த 111 வருடமாக இயங்கும் இலங்கை கூட்டுறவு துறையானது 46,௦௦௦ பணியாட்களையும் ௦8 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களையும் உள்ளடக்கியுள்ளது. இலங்கை கூட்டுறவுச் சொத்துக்கள் மற்றும் சேமிப்புத் தளமானது 04 லட்சத்து 18 ஆயிரத்து 416 மில்லியன் ரூபாவாக (2.8 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் பல்வேறு உற்பத்தி, சேவைகள், நடுத்தர – சிறிய தொழில்கள், பெண்கள் மீதான அபிவிருத்தி, கிராமப்புற வங்கி, காப்புறுதி மற்றும் விவசாயம் ஆகியவற்றில் 14,454 கூட்டுறவு சங்கங்களைக் கொண்டுள்ளது.

ஒரு தசாப்தத்திற்குப் பின்னர், ௦8 மில்லியன் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபை, மாவட்ட கூட்டுறவு சபை மற்றும் பிராந்திய கூட்டுறவு அதிகாரிகளின் கீழ் உள்ள சகல கூட்டுறவு அமைச்சர்கள், ஓரே மனதாக இந்த கொள்கைக்கு இறுதி ஒப்புதல் அளித்தனர்.

அனைத்து இலங்கை கூட்டுறவுத் துறையால் முன்னெடுக்கப்படும் இத்துறையின் மீது முதன்முறையாக  ஒருமித்து ஓரே மனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கான செயற்பாடுகள் 2008 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு
பின்னர், பல்வேறு அரசாங்கங்களின் கீழ் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது அமைச்சின் தலைமையில், தேசிய கூட்டுறவு கொள்கை பங்குதாரர் ஆலோசனைக்கான பல கலந்துரையாடல் சுற்றுக்கள் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டன. 2016ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆதரவுடன்  தேசிய கூட்டுறவு கொள்கைக்கான இறுதி முடிவு எட்டப்பட்டதும், அமைச்சர் ரிஷாட்டின் உத்தரவின் பேரில் அமைச்சரவை ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

புதிய தேசிய கூட்டுறவு கொள்கையின் முக்கிய கருப்பொருளில், எமது கூட்டுறவுத் துறையினை, ஏனைய உலக கூட்டுறவு இயக்கங்களுக்கு இணையாக நவீனமயப்படுத்துதல் மற்றும் இத்துறையின் அடுத்த கட்டத்திற்கும் மற்றும் சட்டபூர்வமான கட்டமைப்பை எளிதாக்குவதற்கும், உலக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, அவற்றுடன் இணைந்து சுய நிதியுதவி, நல்லாட்சி, நிதி மற்றும் கடன் வழிமுறைகள் அறிமுகப்படுத்துதல், அதிக எண்ணிக்கையான இளைஞர்கள் மற்றும் பெண்களை ஈடுபடுத்துதல் நோக்காகும்.

“இலங்கை நுகர்வோர் வாழ்வில் கூட்டுறவுத்துறை முக்கியத்துவம் வாய்ந்தது. நாம் உத்தியோகபூர்வமாக அதனை அபிவிருத்தி செய்வதற்கும் முக்கிய நகர்வுகளை எடுத்துள்ளோம். இப்போது எங்களுக்கு ஒரு பெரிய கட்டமைப்பு தேவைப்படுகிறது. இலங்கையின் தேசிய கூட்டுறவு கொள்கையை அறிமுகப்படுத்துவதன்  மூலம் இந்த இலக்கை அடைய முயற்சிக்கிறோம்” என 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆதரவுடன் முதலாவது கூட்டுறவு கொள்கை தொடர்பில் இடம்பெற்ற, தேசிய ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத் தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்