கல்முனை மாநகரசபை ஆணையாளராக, அன்சார் கடமையேற்பு

🕔 August 10, 2018
– அஸ்லம் எஸ்.மௌலானா –

ல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக எம்.சி. அன்சார், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், இதுவரை கல்முனை மாநகர ஆணையாளராக கடமையாற்றிய ஜே.லியாகத் அலி கலந்து கொண்டு, புதிய ஆணையாளரிடம் பொறுப்புக்களை கையளித்தார்.

இதன்போது மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச். முஹம்மட் கனி, கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ். எம்.சத்தார், அப்துல் மனாப் மற்றும் மாநகர சபையின் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு புதிய ஆணையாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

புதிய ஆணையாளர் அன்சார் – இதற்கு முன்னர் கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றினார்.

இலங்கை நிருவாக சேவை அதிகாரியான எம்.சி. அன்சார் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அதேவேளை கடந்த ஆறு வருடங்களாக கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த மருதமுனையை சேர்ந்த ஜே. லியாகத் அலி , அட்டாளைச்சேனை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments