எதிர்க்கட்சித் தலைவரை, சபாநாயகர் அறிவித்தார்

🕔 August 10, 2018

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக ரா.சம்பந்தன் தொடர்ந்தும் செயற்படுவார் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய சபையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய சபை நடவடிக்கைகளை ஆரம்பித்து உரையாற்றிய போதே, அவர் இந்த அறிவிப்பினை விடுத்தார்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ரா. சம்பந்தனே அரசியல் யாப்புக்கிணங்க எதிர்கட்சித் தலைவராக செயற்படுவார் என, இதன்போது சபாநாயகர் விபரித்தார்.

Comments