சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு உடனடி இடமாற்றம்

🕔 August 1, 2018

சிறைச்சாலை அத்தியட்சகர்கள், சிறைச்சாலை உதவி அத்தியட்சகர்கள் மற்றும் ஜெய்லர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு உடனடி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இந்த இடமாற்றங்களுக்கான உத்தரவினை வழங்கியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டப்ளியூ.எம்.எம்.ஆர். அதிகாரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையான நிலைக்கு கொண்டு வருவதற்கும் அதிகாரிகளின் செயல்திறன் நிலமையை கருத்திற் கொண்டும் சிறைச்சாலை திணைக்களத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கிலும் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்பான செய்தி: திடீர் பணக்காரர்களான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள்: விசாரணைகள் ஆரம்பம்

Comments