போதைப் பொருள் மரண தண்டனை கைதிகள் பட்டியல்: தமிழர்கள் 07 பேர் உள்ளனர்

🕔 July 19, 2018

ரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணத்தில், தமிழர்கள் 07 பேரின் பெயர் உள்ளன என்று தெரியவருகிறது.

குறித்த பெயர்ப்பட்டியல் ஆவணத்தை  நீதி அமைச்சுக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அனுப்பி வைத்தது.

போ​தைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் விபரங்கள் இவ்வாறு அனுப்பப்பட்டது.

அதில், தமிழர்கள் ஏழுபேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.

2003ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட எஸ். புண்ணியமூர்த்தி, எஸ். கணேசன், மற்றும் 2013ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள டபிள்யு. விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ. சுரேஸ் குமார் ஆகியோரே மேற்படி தமிழர்களாவர்.

Comments