குழந்தைக்கு மதுபானம் கொடுத்தமை தொடர்பில், விசாரணை ஆரம்பம்

🕔 July 17, 2018

குழந்தையொன்றுக்கு மதுபானம் அருந்தக் கொடுக்கும் வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பரவியுள்ள நிலையில், அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் பற்றிய விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, வீடியோ மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் வீடியோவாகப் பதிவுசெய்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறியக் கிடைத்ததையடுத்து, தற்போது விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான தேசிய வாரம், 14ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மதுபானம் கொடுக்கும் வீடியோ பதிவு

Comments