சம்பளம் வேண்டாம், தூக்கிலிடுகிறேன்: அலுகோசு பதவிக்கு பெண்ணொருவர் தயார்

🕔 July 16, 2018

ரண தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் அலுகோசு பணியை சம்பளமின்றி இலவசமாக செய்வதற்கு – தான் தயார் என வயோதிப பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் பட்சத்தில், இதனை தான் செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிலாபம், ஆரச்சிகட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது எல்.பி. கருணாவதி என்ற பெண் இவ்வாறு முன்வந்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள், இளம் சந்ததியினரின் எதிர்காலத்தை இல்லாது செய்வதாகவும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமெனவும் இந்தப் பெண் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்