மரண தண்டனைக் கைதிகள் 18 பேரின் விபரங்கள், நீதியமைச்சிடம் ஒப்படைப்பு

🕔 July 15, 2018

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியலை, நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஒப்படைத்துள்ளது.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள், சிறைச்சாலைகளில் இருந்தவாறே தொடர்ந்தும் அந்தக் குற்றத்தில் ஈடுபட்டு வருவார்களாயின், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையினை அமுல்படுத்தப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்தே, போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 18 கைதிகளின் பெயர்ப் பட்டியல் நீதியமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மரண தண்டனைக் கைதிகளைத் தூக்கிலிடும் அலுகோசு பதவிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருவதற்கு, அடுத்த வாரம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

இலங்கையில், இரண்டு அலுகோசு பதவிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments