மரண தண்டனையை கைவிடுமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

🕔 July 14, 2018

நாட்டில் மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை  கைவிடவேண்டுமென, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி , பிரதமர், சபாநாயகர், நீதி அமைச்சர் மற்றும் எதிர் கட்சி தலைவர் ஆகியோருக்கு  ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ள கடித்திலேயே இதனை வலியுறுத்தியுள்ளது.

அக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

மரணதண்டனையை நீக்கும் பரிந்துரையை உங்களதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கொண்டு வர விரும்புகின்றது. மரண தண்டனையானது கொடூரமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனையாகும். மேலும், அத்தண்டனையானது சுதந்திரம் மற்றும் உயிர் வாழும் உரிமைகளை கடுமையாக மீறுகின்றது. அதேவேளை, மாற்ற முடியாத தண்டனையாகவும் அது உள்ளது.

அத்துடன் குற்றத்தை தடுப்பதற்கு திறனற்றதாகவும் உள்ளது. வளர்ச்சியடையும் உலகின் ஏற்புடைமையை விரைவாக இலங்கை அங்கீகரிக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

மரண தண்டனையை நீக்கியுள்ள 100 ற்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கும் உயிரின் புனித்தன்மைக்குமான இலங்கையின் ஈடுபாட்டை உண்மையாகக் வேண்டும். ஏனைய 60 ற்கு மேற்பட்ட நாடுகள் நடைமுறையில் மரண தண்டனையை செயற்படுத்துவதில்லை.

சர்வதேச மற்றும் ஒப்பீட்டுத் தன்மையான சட்டவியல் பார்வையில் மரண தண்டனையானது கொடூரமானதும் மனிதாபிமானமற்றதும் மற்றும் இழிவானதுமான தண்டனையாகும். மேலும் மனித உயிரின் புனித்தன்மையை மதிக்கவும் தவறுகின்றது என்ற நிலைப்பாட்டுடன் ஆணைக்குழுவும் உடன்படுகின்றது.

இலங்கை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உயிர் வாழும் உரிமை அடிப்படை உரிமையென வெளிப்படையாகக் கண்டுகொள்ளப்படாவிட்டாலும், 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் உட்கிடையாக அடங்கியுள்ளது என குறிபப்பிடுகின்றது.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் உறுப்புரை 11 சித்திரவதை மற்றும் கொடூர மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான நடத்தை அல்லது தண்டனையை ஏதேனும் ஒதுக்கம் ஏதுமில்லாது தடுக்கின்றது. ஆகவே மரண தண்டனையை அமுல்படுத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி விலக்கிக்கொள்ள வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்