ராஜாங்க அமைச்சர்களாக இருவர் சத்தியப் பிரமாணம்

🕔 July 10, 2018

ஜே.சி. அலவத்துவல மற்றும் லக்கி ஜயவர்த்தன ஆகியோர் இன்று செவ்வாய்கிழமை ராஜாங்க அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சராகப் பதவி வகித்த ஜே.சி. அலவத்துவல,  அதே அமைச்சுக்கான ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, மலை நாடு புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த லக்கி ஜயவர்த்தன, நகர திட்டமிடல் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்