ஜனாதிபதியின் மன்னிப்பை ஞானசார தேரருக்கு நாங்கள் எதிர்பார்க்கவில்லை: டிலந்த விதானகே

🕔 June 16, 2018

னாதிபதியின் மன்னிப்பினை ஞானசார தேரருக்கு தாம் எதிர்பார்க்கவில்லை என்று, பொதுபலசேனா அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் ஞானசார தேரர் அநியாயத்தை எதிர்கொண்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி உட்பட அதிகாரிகள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியாவை, அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஞானசா தேரருக்கு, ஒரே தடவையில் அனுபவிக்கும் வகையிலான ஆறு மாதங்களைக் கொண்ட இரட்டை கடூழியச் சிறைத்தண்டனைநேற்று முன்தினம் வியாழக்கிழமை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் ‘ஆர்’ பிரிவில், 15 கைதிகளுடன் தற்போது ஞானசார தேரர் வைக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஞானசார தேரரின் உடல்நிலை குறித்து வைத்தியர்கள் வியாழக்கிழமை இரவு பரிசோதித்ததாகவும், அவரின் பாதங்களிலுள்ள சில புண்களுக்கு மருந்திட்டதாகவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும் ஞானசாரவைக் காண்பதற்கு நேற்று வெள்ளிக்கிழமை சிறைச்சாலைக்கு வந்தவர்களை, அவர் சந்திக்காமல் தவிர்ந்து கொண்டதாகவும் டிலந்த விதானகே தெரிவித்தார்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்