தலைப்புச் செய்திகள்

நான்கு மாதங்களில் 90 யானைகள் பலி; கவலை தரும், புள்ளி விபரம்

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மட்டும் 90 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக  வனவிலங்குகள் திணைக்களத்தின் யானை புள்ளிவிபர பிரிவின் பிரதி பணிப்பாளர் யூ.எல். தௌபிக் தெரிவித்தார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இது அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு வெடியினால் பாதிக்கப்பட்டு அதிகளவான யானைகள் உயிரிழந்துள்ளன.

துப்பாக்கி சூடு காரணமாக 16 யானைகளும், மின்சார வேலியில் சிக்கி 10 யானைகளும் உயிரிழந்துள்ளன.

யானை – மனித மோதல்கள் காரணமாக இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் ஹெரவபொத்தானை வனவிலங்கு வலயத்திற்குள் 06 யானைகள் வரையில் பலியாகியுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டு வெடியில் சிக்கியமை மற்றும் துப்பாக்கி சூடு காரணமாக மேற்படி 06 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு திணைக்கள அதிகாரி ஒருவர் கூறினார்.

இவ்வாறு உயிரிழந்த யானைகள் இரண்டு மற்றும் இரண்டரை வயதை உடையன எனவும் அவர் தெரிவித்தார்