தினக்குரல் பத்திரிகைக்கு காத்தான்குடியில் தடை: நகர சபை அறிவிப்பு

🕔 May 1, 2018

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

காத்தான்குடி நகர சபையின் கீழுள்ள நூலகத்திலும் அதே போன்று அதனோடு இணைந்த வாசிகசாலைகளிலும் தினக்குரல் பத்திரிகை வைக்கப்படுவதை, காத்தான்குடி நகரசபை முற்றாக தடை செய்வதாக அறிவித்துள்ளது.

முஸ்லிம்களை கொச்சைப்படுத்தும் விதத்தில் தினக்குரல் பத்திரிகை கடந்த சனிக்கிழமை (28.4.2018) தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தமையினை அடுத்து, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் காத்தான்குடியிலுள்ள பத்திரிகை விற்பனையாளர்கள் தினக்குரல் பத்திரிகையை விற்பனை செய்வதையும் தடை செய்வதெனவும் காத்தான்குடி நகர சபை தீர்மானித்துள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச். அஸ்பர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் காத்தான்குடியிலுள்ள பத்திரிகை விற்பனையாளர்களுக்கு இன்று செவ்வாய்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: தினக்குரல் எனும் ‘புழக்கடை’ வழியாக, இனவாதம் கக்கும் வீரகேசரி: முஸ்லிம்களே புறக்கணியுங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்