போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர்கள் கைது; வாயில் போட்டு மென்ற போது பொலிஸார் அமுக்கினர்

🕔 April 29, 2018

ட்டமாவடியில்  போலி நாணயத்தாள்களுடன் நான்கு பேர் நேற்று சனிக்கிழம மாலை கைது செய்யப்பட்டனர் என, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை சுங்காவில் பகுதியைச் சேர்ந்தவர்களே, இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள்  18 வயது தொடக்கம் 26 வயதுக்குட்பட்டவர்களாவர்.

ஐயாயிரம் ரூபாய் போலியான பதினொரு நாயணத்தாள்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓட்டமாவடி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருள் நிரப்பி விட்டு நாணயத்தாளை வழங்கும் போது, ஊழியர் இது போலி நாணயத்தாள் என அறிந்து பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை பொலிஸார் கைது செய்த போது, நாணயத் தாள்களை வாயில் போட்டு மென்றுள்ளனர். ஆயினும் நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments