வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியா சென்றார்; 65 ஆண்டுகளின் பின்னர் அதிசயம்

🕔 April 27, 2018

டகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் தென்கொரியாவுக்கு இன்று வெள்ளிக்கிழமை பயணித்துள்ளார்.

1953ஆம் ஆண்டு நடைபெற்ற கொரிய போரின் முடிவிலிருந்து, கொரிய தீபகற்பத்தை பிரிக்கும் ராணுவ எல்லைகளை கடந்து, முதல் முறையாக தென் கொரியாவில் கால் பதிக்கும் வட கொரிய தலைவர் என்ற பெயரை கிம் ஜோங் உன்  பெறுகிறார்.

தென்கொரியாவுக்குச் சென்ற வடகொரியத் தலைவர் கிம், தென்கொரியத் தலைவர் மூன் ஐ இதன்போது சந்தித்துப் பேசியுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் இதன்போது ஒரு மணிநேரமாக தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் இருநாட்டு தலைவர்களின் மனைவிகளையும் இதுவரை இந்த சந்திப்பில் காணமுடியவில்லை என, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சில காலங்களாக வட கொரிய தலைவருடைய மனைவி ரி சோல்-உ பொது வெளியில் அதிகம் காணப்பட்டார்.

எனவே அவர் இந்த சந்திப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுவரை அவரை காணாத போதிலும் இன்றிரவு பெரிதாக நடைபெறவுள்ள விருந்தில் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, தென் கொரிய தலைவர் மூன் உடன் நல்ல முறையில், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல விளைவுகளை ஈட்டுவேன் என்று கிம் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இன்று நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்த வட கொரிய தலைவர் கிம்முக்கு நான் எனது மரியாதையை தெரிவித்து கொள்கிறேன் என தென் கொரிய தலைவர் மூன் கூறியுள்ளார்.

தென் கொரியாவில்வடகொரிய தலைவர் கிம்முக்கு சிறப்பு மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இரண்டு நாடுகளின் எல்லையில் இருபுறத்திலிருந்தும் கிம் மற்றும் மூன் கைகளை குலுக்கினர்.

இதன்போது எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் தென் கொரிய அதிபர் வட கொரிய எல்லைக்குள்ளும் சென்றார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்