தலைப்புச் செய்திகள்

எனக்கு அமைச்சுப் பதவி தருவதற்கு, ஜனாதிபதி மறுப்பில்லை: ரவி கருணாநாயக்க

அமைச்சுப் பதவியொன்றினை தனக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு தொட்டலங்க பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்;

“எனக்கு அமைச்சு பதவியொன்றை வழங்குவதற்கு ஜனாதிபதி மறுக்கவில்லை.

நாட்டை அபிவிருத்தி செய்ய இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாக அமைந்துள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் அழிவுப்பாதையில் செல்வதுடன் நாட்டை நகைப்பிற்குரியதாக மாற்றியுள்ளது.

நான் அமைச்சராக இருந்த காலத்தில் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறைத்திருந்தேன்” என்றார்.