ராணுவம் விடுவித்த பகுதியில் மோட்டார் குண்டு மீட்பு

🕔 April 19, 2018
– பாறுக் ஷிஹான் –

லி­கா­மம் வடக்­கில் விடுவிக்கப்பட்ட கட்டுவன் சந்திக்கு அரு­கில் உள்ள வீட்டு கிணற்றுத் தொட்­டி­யில் இருந்து நேற்று புதன்கிழமை மோட்­டார் குண்­டு­கள் மீட்கப்பட்டன.

ரா­ணு­வத்­தி­ன­ரின் உயர் பாது­காப்பு வல­ய­மாக 28 ஆண்டு கால­மாக இ இருந்த வலி.வடக்­கில் 683 ஏக்­கர் நிலப்­ப­ரப்பு கடந்த 13ஆம் திகதி காணி உரி­மை­யா­ளர்­க­ளி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அவ்­வாறு விடு­விக்­கப்­பட்ட கட்­டு­வன் சந்­திக்கு அரு­கில் உள்ள வீடொன்­றின் கிணற்றடி­யில் உள்ள தண்­ணீர் தொட்­டிக்­குள், மோட்­டார் குண்­டு­கள் காணப்­பட்­டன.

இது தொடர்­பில் அரு­கில் இருந்த ரா­ணுவ முகா­முக்கு வீட்­டின் உரி­மை­யா­ளர் தெரிவித்­ததை அடுத்து, உரிய இடத்­துக்குச் ராணுவத்தினர் சென்றனர்.

பின்னர், கண்­ணி­வெடி அகற்­றும் குழு­வி­னர் அங்­கி­ருந்து குண்­டு­களை மீட்­டுச் சென்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்