உலக சம்பியன் உசைன் போல்ட், மூன்றாவது முறையாகவும் தங்கம் வென்றார்

🕔 August 24, 2015

Usain Bolt - 05
சீ
னாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டிகளில், ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் (Usain Bolt)100 மீட்டர் குறுந்தூர ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லீன் (Justin Gatlin), இந்தப் போட்டியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உசைன் போல்ட் 9.79 வினாடிகளில், 100 மீற்றர் தூரத்தினைக் கடந்து முதலிடத்தை வென்றார்.

நூறு மீற்றர் அரையிறுதிப் போட்டியில், ஜஸ்டின் காட்லீன்  9.77 வினாடிகளில் ஓடியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இறுதிப் போட்டியில் – உசேன் போல்ட் மற்றும் ஜஸ்டின் காட்லீன் ஆகியோர், முதல் 50 மீட்டர் தூரத்தினை சம வேகத்தில் ஓடிக் கடந்தனர்.

ஆயினும், கடைசி 30 மீட்டர் தூரத்தினை, உசைன் போல்ட் அபாரமாக ஓடிக் கடந்து, முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். ஜஸ்டின் காட்லீன் 9.80 வினாடிகளில் 100 மீட்டர் தூரத்தினைக் கடந்து, இரண்டாமிடத்தினை் பெற்றார்.

உலகத் தடகளத்தில், உசைன் போல்ட் வெல்லும் 03ஆவது தங்கப் பதக்கம் இதுவாகும். இதற்கு முன் அமெரிக்க வீரர்கள் கார்ல் லூயீஸ், மவுரீஸ் கிரீன் ஆகியோர் இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.Usain Bolt - 09

Comments

புதிது பேஸ்புக் பக்கம்