போதையில் தள்ளாடி, கீழே விழுந்த பொலீஸ்; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

🕔 August 24, 2015

பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதையில் தள்ளாடிய நிலையில், கீழே விழுந்த வீடியோ ஒன்று, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய தலைநகர் டெல்லியில், புகையிரதப் பயணமொன்றின்போது,  இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

புகையிரதத்தில் பயணிக்கும் மேற்படி பொலீஸ் உத்தியோகத்தர் மதுபோதையில் காணப்பட்ட நிலையில், கீழே விழுந்து விட, அவரை பொதுமக்கள் கைத்தாங்கலாக தூக்கி விடுகின்றனர்.

பொலீஸ் உத்தியோகத்தர், போதையில்  நிற்கக்கூட நிதானமின்றி அமருவதற்கு இடம்தேடி அலைகிறார்.

பின்னர், அவர் இறங்குவதற்காக புகையிரத கதவை நோக்கிச் செல்லும் போது, தள்ளாட்டத்தில் கீழே விழுகிறார்.

இதனையடுத்து, சக பயணிகள் – அந்தப் பொலீஸ் உத்தியோகத்தரை கைத்தாங்கலாக தூக்கி விடுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்