தேசிய காங்கிரசுக்குள் குழப்பம்; அதாஉல்லாவின் படங்களையும் டயர்களையும் எரித்து, அக்கரைப்பற்று வீதிகளில் அட்டகாசம்

🕔 March 14, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை, தேசிய காங்கிரசின் தலைவர் அறிவித்தமையினை அடுத்து, அந்தப் பதவிகளை எதிர்பார்த்திருந்த உறுப்பினர்கள், வீதிகளில் டயர்களையும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளையும் எரித்து தமது எரிப்பினை வெளிப்படுத்திய சம்பவங்கள், இன்று புதன்கிழமை அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்றன.

அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபைகளின் ஆட்சிகளை, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடந்து முடிந்த அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா, தனது இரு புதல்வர்களையும் களமிறக்கியிருந்தார். அவர்கள் இருவரும்  வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய மூத்த புதல்வர் சக்கியை, அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயராக அதாஉல்லா அறிவித்துள்ளார். இதேவேளை, பிரதி மேயராக அஸ்மி அப்துல் கபூரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளை தமக்கு வழங்குமாறு, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவிடம் கேட்டு முரண்பட்ட இரண்டு நபர்கள், அந்தக் பதவிகள் தமக்கு இல்லையென்றான நிலையில், அதாஉல்லாவுக்கு எதிராக இன்று அக்கரைப்பற்றில் டயர்களை எரித்ததோடு, முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளை காலில் மிதித்து அசிங்கப்படுத்தி, தீயிட்டுக் கொழுத்தியதாகவும் அறிய முடிகிறது.

அக்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் பதவியை எஸ்.எம். சபீஸ் என்பவரும், பிரதி மேயர் பதவியை எம்.சி.எம். யாசிர் என்பவரும் தங்களுக்கு வழங்குமாறு தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாவிடம் வாதிட்ட நிலையிலேயே, அந்தப் பதவிகளை வேறு நபர்களுக்கு வழங்குவதாக, அதாஉல்லா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

</

Comments

புதிது பேஸ்புக் பக்கம்