இனவாதி சாலியவை, விரட்டியடிக்கிறது கட்டார்

🕔 March 12, 2018

லங்கையிலும் கட்டார் நாட்டிலும் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்த, சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த ரணவக்க துஷார எனப்படும் சாலிய ரணவக்கவை, கட்டார் பொலிஸார் கைது செய்தமையைத் தொடர்ந்து, அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார்.

தற்போது சிறையிலமைக்கப்பட்டுள்ள சாலிய ரணவக்க, நாளை திங்கட்கிழமை பிற்பகல் கட்டாரிலிருந்து விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளார்.

சாலிய ரணவக்கைவை விடுவிக்குமாறு கட்டார் அரசாங்கத்திடம், அங்குள்ள இலங்கைத் தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அவர் விடுவிக்கப்பட்டு, நாடு கடத்தப்படவுள்ளார்.

நாளைய தினம் கட்டாரிலிருந்து சாலிய ரணவக்கவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான விமான டிக்கட் பதிவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தரான சாலிய ரணவக்க, இலங்கையில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் இவர் பேசியுள்ள பல்வேறு வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே, கட்டார் சென்றுள்ள இவர், அங்கிருந்தும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதேவேளை, சாலிய ரணவக்க கட்டாருக்கும் கட்டாரிலிருந்து வேறு நாடுகளுக்கும் பயணம் செய்வதற்கான தடையியும், கட்டார் அரசாங்கம் விதித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்