ரணில் அம்பாறை வருவாராம்; ஹக்கீமிடம் உறுதியளித்ததாக, பிரதியமைச்சர் ஹரீசின் ஊடகப் பிரிவு தெரிவிப்பு

🕔 February 28, 2018
– அகமட் எஸ். முகைடீன் –

ம்பாறை நகரிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்டமையினை அடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (03ஆம் திகதி), அங்கு வருகை தரவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளதாக, பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹசீரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை நகருக்கு விஜயம் செய்ய வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் ஹரீஸ், பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று புதன்கிழமை காலை பிரதமரை சந்தித்து, பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்ததோடு, குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடினார்.

இதன்போதே, பிரதமரின் கள விஜயம் தொடர்பான மேற்குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்