நிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு

🕔 February 15, 2018

மைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, புதிய பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய அரசாங்கத்தை அமைத்து, அதில் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவை மீண்டும் சபாநாயகராக நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிகிறது.

உள்ளுராட்சி தேர்தலையடுத்து, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள இரண்டு கட்சிகளுக்கிடையிலும் பாரிய பிளவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அரசாங்கத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தனித்து ஆட்சியமைப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்