மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 January 25, 2018

– மப்றூக் –


றக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

மாயக்கல்லி மலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், குறித்த சிலை வைக்கப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்ற போதிலும், அந்தச் சிலை இன்னும் அகற்றப்படாமல் உள்ள நிலையிலேயே,  மு.கா. தலைவர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இறக்காமம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மு.கா. தலைவர் இந்த விடயங்களைக் கூறினார்.

மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்ட பின்னர், அந்தப் பகுதியை தொல்பொருள் பகுதியாக பிரகடனம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்போது அவ்விடயத்தை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்த போது, அவ்வாறு பிரகடனம் செய்வதை பிரதமர் தடுத்து நிறுத்தியதாகவும் மு.கா. தலைவர் இங்கு தெரிவித்தார்.

எனவே, அவ்வாறு உதவியளித்த பிரதமரை மதிக்க வேண்டும் என்றும், அதனால் யானைச் சின்னத்தில் போட்டியிடும் மு.காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், இதன்போது ரஊப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.

வீடியோ

Comments