வாக்களிப்பு நிலையங்களுக்குள் கைத் தொலைபேசிகளுக்கு தடை: மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

🕔 January 26, 2018

ள்ளுராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் வாக்காளர்கள் கைத் தொலைபேசி கொண்டு செல்வதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தடைசெய்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்காளர் ஒருவர் தனது வாக்குச் சீட்டினை கைத் தொலைபேசியில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், மேற்படி தகவலை வெளியிட்டார்.

இதேவேளை, வாக்களிப்பு நிலையங்களில் சி.சி.ரி.வி. கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தால், அது குறித்து வாக்காளர்கள் தமது எதிர்ப்பினை தெரிவிக்க முயும் என, அவர் ஏற்கனவே அறிவித்துள்ளமையும் நினைவு கொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்