புதிது வழங்கும் மக்களுக்கான களம்; ஆதாரங்களுடன் பதிவு செய்யுங்கள்

🕔 December 16, 2017

ம்மைச் சுற்றி ஒவ்வொரு நாளும் ஏராளமான நிகழ்வுகளும், சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அவை பற்றிய கருத்துக்கள், விமர்சனங்கள், அபிப்பிராயங்கள் மற்றும் ஆதங்கங்களைப் பதிவு செய்வதற்கான களத்தினை ‘ புதிது’ செய்தித் தளம் வழங்கவுள்ளது.

எனவே, தமது கருத்துக்களைப் பதிவு செய்வதற்கான களமாக ‘புதிது’ செய்தித் தளத்தினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனிப்பட்ட தாக்குதல்கள், நாகரீகமற்ற சொற் பிரயோகங்களைத் தவிர்த்து, தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அனுப்புவோருக்கு, நிச்சயமாக நாம் களம் தரக் காத்திருக்கின்றோம்.

பொதுப் பிரச்சினைகள் எதுவாயினும், அதனை எமக்கு எழுதியனுப்புங்கள்

உதாரணமாக, இது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள், தேர்தல் சட்டத்தை மீறுவோர், நாகரீகமாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவோர் என, நீங்கள் காண்பவற்றினை ஆதாரங்களுடன் பதிவு செய்து, அவை பற்றிய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களுடன் அனுப்பி வையுங்கள்.

உங்களுக்கான களத்தினை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் பதிவுகளை editorputhithu@gmail.com எனும் ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்