றிப்கான் பதியுதீன் வட மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜிநாமா

🕔 October 6, 2017
டக்கு மாகாணசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உறுப்பினர் றிப்கான் பதியுதீன், தனது பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

தமது கட்சி சார்பாக வடக்கு மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாமல் போன ஒருவருக்கு சந்தர்ப்மொன்றினை வழங்க வேண்டும் என்பதற்காகவே, தான் ராஜிநாமா செய்ததாக றிப்கான் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வில் இன்று வெள்ளிக்கிழமை அவர் கலந்து கொண்டு உரையாற்றும் போது, தனது ராஜிநாமா தொடர்பில் அறிவித்தார்.

இதன்போது அவர் கூறுகையில்;

“மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்ததனால் இன்னுமொரு பிரதிநிதியை வெற்றி பெறும் வாய்ப்பை தவற விட்டோம்.

எனக்கு அடுத்ததாக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட எமது கட்சியின் மூத்த உறுப்பினர் அலிகான் ஷரீப் வெற்றி பெறாத கவலை எமது கட்சியின் தலைவருக்கு இருந்தது.

எனவே அந்த கவலையை நிவர்த்தி செய்வதற்காகவும் அரசியலிலே நாங்கள் ஒரு முன்மாதிரியைக் காட்டுவதற்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான், எனது உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்கிறேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்