அமைதிக்கான நோபல் பரிசு; வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார்

🕔 October 6, 2017

மைதிக்கான இந்த ஆண்டுக்குரிய நோபல் பரிசு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், அணு ஆயுதங்களை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச பிரசார அமைப்புக்கு (International campaign to abolish nuclear weapons – ICAN) வழங்கப்படும் என்று உத்தியோகபூர்வமாக இன்று வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவை தளமாகக் கொண்டியங்கும் மேற்படி அமைப்பு, அணு ஆயுதப் பாவனையைத் தடுப்பதற்கும், இல்லாதொழிப்பதற்குமாக பாடுபட்டு வருகின்றமைக்காக, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக் கொள்ளும் போட்டியாளர்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் உள்ளடங்கியிருந்ததாக, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும், அமைதியை நேசிப்பவர்களாக இருப்பதில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

மியன்மார் ஆளுங்கட்சியின் தலைவி ஆங்சான்சூகியை இதற்கு ஓர் உதாரணமாக, ஊடகங்கள் கூறி விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்