எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

🕔 September 26, 2017

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பினை ஏற்றுள்ள த.தே.கூட்டமைப்பானது 4.5 வீதமான வாக்குகளையே பெற்றுள்ளது. அதுவும் அந்த வாக்குகள் வடக்கு கிழக்கில் மாத்திரமே உள்ளன.

அதேபோன்று எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாள் பதவியை நாடாளுமன்றில் கொண்டுள்ள ஜே.வி.பி.யினர் 5.7 வீதமான வாக்குகளை மட்டுமே நாடு முழுவதும் கொண்டுள்ளனர்.

எனவே, இவர்களினூடாக மக்களின் கருத்துக்களை அறிய முடியாது” என்றும், கெஹலிய கூறினார்.

எனவே, ஒன்றிணைந்த எதிரணியினருக்கே நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்