மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது; சட்டத்தரணிகள் சங்கம் குற்றச்சாட்டு

🕔 September 26, 2017

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட விதம் தவறானது என்று, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் யூ.ஆர்.டி. சில்வா, இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

சில சட்ட மூலங்களை நிறைவேற்றும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், இதன்போது பின்பற்றப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார்.

இதனால், சட்டத்துக்கு மிகப் பெரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்ட மூலம், கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்