தேர்தல்களை எதிர்கொள்ள, எந்த நேரமும் தயாராக இருங்கள்: சு.க. மத்திய குழு கூட்டத்தில் மைத்திரி தெரிவிப்பு

🕔 September 7, 2017

ள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களை, சு.கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டார்.

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவினுடைய விசேட கூட்டம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்து நள்ளிரவு வரை இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் பேசும்போதே மேற்கண்ட விடயத்தை ஜனாதிபதி கூறினார்.

“அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தை செய்து, அதன் மூலம் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஒரு வருடம் ஒத்தி வைப்பதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது. ஆயினும், இது தொடர்பான தீர்மானத்தை உச்ச நீதிமன்றமே மேற்கொள்ளும்” எனவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

ஆகவே, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் தேர்தலை எந்த வேளையினும் எதிர்பார்த்துக் காத்திருக்குமாறும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்