சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

🕔 July 28, 2015

Ranil - 01
– அஸ்ரப் ஏ. சமத் –

நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.

எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தலின் பின்னர், சிறந்த ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி கைச்சாத்திடும் நிகழ்வு, இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

இதன்போது – சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புக்களின் பிரதிநிதிகளும், 75 க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும், இக் கைச்சாத்திடும் நிகழ்வின்போது, சமூகமளித்திருந்தனர்.

எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தலின் பின்னர் –  சிறந்த ஆட்சி ஏற்படுத்தப்படுவதோடு, சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டுமென, இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் – தோ்தல் தொடர்பான யாப்பில் மாற்றம் செய்வதோடு,  மக்கள் சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் பாதுகாக்கப்படுதல் அவசியமாகும் எனவும் மேற்படி ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அமுலாக்கப்பட்ட 19 ஆவது சீர்திருத்தம் தொடர்பில் அரசியலமைப்புச் சபையினை நிறுவி, அதனை அமுலாக்குவதோடு – நிதி மோசடி, துஸ்பிரேயோகம், பழிவாங்கல்கள், தேச துரோகம் ஆகிவற்றில் ஈடுபடும் நாடாளுமன்ற  அரசியல்வாதிகளைத் தண்டிப்பதோடு, அவர்களின் குடியுரிமையை இல்லாமலாக்க வேண்டுமெனவும் இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு – பொலிஸ், தோ்தல், நீதிச் சேவை, சட்டம் மற்றும் ஊடகத் துறைகளுக்கு ஆணைக்குழுக்களை நியமிப்பதோடு, அவற்றினை சுயாதீனமாக இயங்கச் செய்ய வேண்டும் எனவும், இவ் ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, கரு ஜெயசூரிய மற்றும் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.Ranil - 03

Ranil - 04Ranil - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்