கைக்கெட்டியது வாய்க்கு எட்டவில்லை; தயாவுக்கு தீர்மானிக்கப்பட்ட மேலதிக அமைச்சுப் பதவி: நேற்று முன்தினம் நடந்த கதை

🕔 August 17, 2017

மைச்சர் தயாகமகேவுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை மேலதிக அமைச்சுப் பதவியொன்றினை ஜனாதிபதி வழங்குவதற்கு திட்டமிட்டிருந்த போதும், இறுதிக் கட்டத்தில் அந்த தீர்மானம் கைவிடப்பட்டதாகத் தெரியவருகிறது.

வெளி விவகார அமைச்சராக நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திலக் மாரப்பன நியமிக்கப்பட்டிருந்தார். அதன்போது, கிழக்கு அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பினை தயா கமகேவுக்கு மேலதிகமாக வழங்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தார்.

ஆயினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட அமைச்சரொருவரும் அந்த நியமனத்தை வழங்க வேண்டாமென ஜனாதிபதியிடம் வேண்டிக் கொண்டமைக்கு இணங்க, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, இவ்வாறானதொரு அமைச்சுப் பதவியை தயா கமகேவுக்கு வழங்குவதற்கு, கிழக்கிலுள்ள அரசியல்வாதிகளில் ஒரு குழுவினரும் எதிர்ப்பு வெளியிட்டதாக அறிய முடிகிறது.

அமைச்சர் தயா கமகே தற்போது ஆரம்ப கைத்தொழில் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். இந்தப் பதவுடன் சேர்த்து மேலதிகமாக, கிழக்கு அபிவிருத்தி அமைச்சினை வழங்குவதற்கே ஜனாதிபதி தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்