ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்; அக்கரைப்பற்று பொறுப்பதிகாரி ஹட்டன் செல்கிறார்

🕔 August 4, 2017

– க. கிஷாந்தன் –

ட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.பி.கே.எம். ஹெட்டியாராச்சி, உடன் அமுலுக்கு வரும் வகையில், புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக, அக்கரைபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம்.ஜெமீல் பொறுப்பேற்க உள்ளார் என்று, பொலிஸ் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர், ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் திகாவத்துர என்பவர், ஹட்டனிலுள்ள சிகை அலங்கார தொழிலாளி ஒருவரைத் தாக்கினார். இதனைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் இடம்மாற்றப்பட்டு, அந்த இடத்துக்கு டி.பி.கே.எம். ஹெட்டியாராச்சி பொறுப்பேற்றிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்