விசாரணைக்கு வர முடியாது; குற்றப் புலனாய்வு பிரிவுக்கு சிராந்தி அறிவிப்பு

🕔 July 27, 2017

க்பி வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, அவரை குற்றப் புலனாய்வு பிரிவு அழைத்திருந்த நிலையில், தன்னால் வர முயாது என்று அவர அறிவித்துள்ளார்.

குறித்த விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை காலை 09 மணியளவில் விசாரணைக்காக ஆஜராகுமாறு அவருக்கு அழைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது. எனினும் தன்னால் வர முடியாதென ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

தனது சட்டத்தரணி ஊடாகவே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிராந்தி ராஜபக்ஷவின் ‘சிரலிய சவிய’ அறக்கட்டளை நிறுவனத்திற்கு, செஞ்சிலுவைச் சங்கத்தினால் வழங்கப்பட்ட ஜீப் வண்டியை, யோஷித ராஜபக்ஷவின் பாவனைக்கு வழங்கியமை தொடர்பில், விசாரணை நடத்துவதற்காகவே சிராந்தி அழைக்கப்பட்டிருந்தார்.

வசிம் கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்காக, நாளைய தினம் யோசித ராஜபக்ஷவை ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்